EP மீது வழக்கு பதிவு செய்து திமுக அரசு தரம் தாழ்த்தி கொள்வதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒருவர்மீது முகாந்திரம் கொண்ட வழக்குகள் பதிவு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், அவர் மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டுள்ளார்கள். இதை திமுக அரசின் தலைகுனிவாகவும், வெட்கக்கேடாகவும் பார்க்கிறேன் என தெரிவித்தார்.