மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேட்டுத் தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி ஆலய 17 ஆம் ஆண்டு சக்திகரகம் பால் காவடி நடந்தது.முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் மற்றும் பால்குடம் காவடி ஆகியவை புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்

பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் கஞ்சிவார்த்தலும் நடைபெற்றது அன்று இரவு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை குத்தாலம் மேட்டுத் தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.