தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் பார்வையாளர்களிடமிருந்து நிறைய நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதோடு, படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் பிரீமியர் காட்சி முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு வசூலான தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

வாத்தி திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 44 கோடி வசூல் செய்ததாக கூறுகிறது. தெலுங்கில் மட்டும் இப்படம் 16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, நாளை 50 கோடியை தாண்டிவிடும் என்று தெரிகிறது.
40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியான முதல் மூன்று நாட்களில் வசூலித்ததை விட அதிக வசூலை ஈட்டி தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… புற்றுநோய் இந்த பழக்கங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையில் இருந்து காப்பற்றுமாம்! கண்டிப்பா பாருங்க!!!