மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேரடி குப்பையன்காலனி தீயணைப்பு நிலையம் அருகில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சப்தகன்னியம்மன் ஆலய எட்டாம் ஆண்டு சக்திகரகம் பால்குட உற்சவம் நடந்தது.
முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் பம்பை உடுக்கை முழங்க சக்தி கரகம் மற்றும் பால்குடங்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர் பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டு பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாண்மைகள் இளைஞர் நற்பணி மன்றம் குப்பையன்காலனி கிழக்கு மேற்கு விளாவடி காலனி தெருவாசிகள் மற்றும் விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் அமுதாராணி தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.