திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆசிர்வாதங்களுடன் சமிதி உறுப்பினர்கள் நாள்காட்டியானது பெற்றுக் கொண்டனர்
சித்திரை 1 சோபக்கிருது தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை அன்று மங்கள சக்தி சமிதி நாள்காட்டியானது திருவாவடுதுறை குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆசிர்வாதங்களுடன் சமிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பெற்றுக்கொண்டனர்.

இந்த தமிழ் நாள்காட்டில் நமது பண்டிகைகள் கலாச்சார குறிப்புகள் 12 ஆழ்வார்களின் ஜெயந்தி தினங்கள் 63 நாயன்மார்களின் முக்தி தினங்கள், தேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், பஞ்சாங்க குறிப்புகள்,நமது பாரத ராணுவம் புரிந்த சாகசங்கள்,பெருமைகள் இடம்பெறும் ஒவ்வொரு நாளும் நம் வீட்டுப் பிள்ளைகள் நம் தாய் மொழியான அழகுத் தமிழின் அர்த்தங்களை உள்வாங்கிக் கொள்வர் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள்காட்டியினை சுரா பப்ளிகேஷன் உரிமையாளர் சுரேஷ் பாபு சிவாஜி அவர்கள் மிக நேர்த்தியான முறையில் வடிவமைத்திருக்கிறார்.அவர்களுக்கு சமிதி சார்பாக நன்றி தெரிவித்தனர்.