ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய விவகாரம்; நாகையில் மோடி உருவ பொம்மையை எரித்து , சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியனரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த போலீசார்.

மோடி மீதான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி குஜராத் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டிணம் அபிராமி சன்னதி திடல் பகுதியில் மாவட்டத் தலைவர் அமிர்தராஜா தலைமையில் எஸ் சி துறை தலைவர் JKT. ராஜ்குமார், எம் ஏ ஹெச் காதர், மாவட்ட துணைத் தலைவர் நத்தர், எம் சி மாணவர் காங்கிரஸ் தலைவர் கோபி, நகரத் தலைவர் உதயசந்திரன் மற்றும் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் உருவ பொம்மையை பறித்து நீரை ஊற்றி அணைத்தனர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள ஓர் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நாகையில் காங்கிரஸ் கட்சியினர் மோடியின் உருவ பொம்மையை எரித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

