கீழ்வேளூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல்
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில்நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம் ஊராட்சி எறும்புகன்னி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த விடியோவை பாருங்க: ஈரோட்டில் நடந்தது இடைத்தேர்தல் அல்ல தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்கு மக்கள் எடை போடுகிற தேர்தல்
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் எறும்புகன்னி மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை நடந்ததும், ராதா மங்கலம் எறும்புகன்னி மெயின் ரோட்டை சேர்ந்த புகழேந்திரன் (வயது 28), அதே பகுதியை அருண் (20) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையும் படிங்க : கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி நடந்தது
2 பேர் கைது இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை போலீசார் 2பேரையும் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்திரன், அருண் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
