spot_img
spot_img

Editor Picks

பிளஸ் டூ மாணவி மரணம் – மின்னல் அடித்து மொத்தம் ஐந்து பேர் பலி

Date:

தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி மாணவி உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர் உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த முருகனின் மகள் வினோஷா 16 இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார் நேற்று மாலை இவர் தனது விவசாய நிலத்தில் நீர் பாய்ந்து கொண்டிருந்தார் அப்போது பலத்த மழை பெய்த நிலையில் திடீரென தாக்கி உயிரிழந்துள்ளார்.

பிளஸ் டூ மாணவி மரணம் - மின்னல் அடித்து மொத்தம் ஐந்து பேர் பலி
Representative Image

மேலும் இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வரகப்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவியான அஞ்சலி 36 வயது என்பவர் வயல்வெளிக்கு சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அதேபோல திண்டிவனம் பெரும்பாக்கத்தை சேர்ந்த துரைசாமியின் மனைவியான ரஞ்சிதமும் 60 வயதானவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

பிளஸ் டூ மாணவி மரணம் - மின்னல் அடித்து மொத்தம் ஐந்து பேர் பலி
Representative Image

அதேபோல யில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்து வந்துள்ளது. துறையூர் தாலுகா அனுப்பட்டியை சேர்ந்த பாண்டி 40 வயது என்பவர் கண்மாய் கரைக்கு அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் அப்போது இவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சேர்ந்த அன்பு என்பவர் 38 வயதாகும் இவர் இளநீர் வியாபாரம் செய்து திரும்பி வரும் வழியில் வரும்போது மழையின் காரணமாக புளிய மரத்துக்கு அடியில் நின்ற இவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்

Share post:

Popular