தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் 700 பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி முதல்வரது பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையும் படியுங்கள்… விழிப்புடன் இருங்கள் – பறவைக்காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததையடுத்து WHO கவலை!

இந்நிகழ்வில் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் மரிய சார்லஸ், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.டி. சார்லஸ், மாவட்ட பிரதிநிதிகள் மாரிமுத்து சார்லஸ் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகேசன்,நிக்சன் வெற்றிவேல், ஒன்றிய பிரதிநிதிகள் கந்தையன், இளைஞரணி அமைப்பாளர் ராஜசெல்வம் மற்றும் வார்டு செயலாளர்கள், உள்ளிட்ட திமுகவினர் பலர் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்… மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.


அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை அனுஷ்கா – அது என்ன நோய்?


நாகப்பட்டினம் மாவட்டம் செய்தியாளர் செ.சீனிவாசன்