கீழ்வேளூர் பேரூராட்சி 4வது வார்டில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் விழா.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 4 வது வார்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 4வது வார்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சேகர் தலைமை வகித்தார் கீழ்வேளூர் திமுக பேரூர் கழக செயலாளர் அட்சய லிங்கம் , பேரூர் கழக துணை செயலாளர் சேகர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கீழ்வேளூர் டாக்டர் அமுதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விவரித்து பேசப்பட்டது தொடர்ந்து வீட்டுக்கு ஒரு தென்னங்கன்று வளர்ப்போம் என 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் நோட், மற்றும் பொது மக்களுக்கு காய்கறிகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாபு, மகேஷ், ராஜா மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் நாலாவது வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கீழ்வேளூர் பேரூராட்சி 4 வது வார்டு உறுப்பினர் எம் கே ஹானஸ்ட் ராஜ் செய்திருந்தார்.
உங்க குழந்தையின் பற்களை சிறுவயதிலிருந்தே வலிமையாக பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா?

திருக்குவளையில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்