நமது தமிழக சமூகநீதி இயக்கம் சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

நமது தமிழக சமூக நீதி இயக்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார் மற்றும் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ். மற்றும் பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் உறுப்பினர்கள் அமீன், பவித்ரன், கலைவாணன் , போஸ், பாம்பே ராஜு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

