வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏடிஎம் மையத்தினை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் இவர்களின் வசதிக்காக அனைத்து வங்கி ஏடிஎம் கார்டுகளையும் பயன்படுத்தும் வகையில் புதிதாக பணம் செலுத்தும் மற்றும் எடுக்கும் வசதி கொண்ட தனியார் ஏடிம் மையம் ஒன்று அமைக்கப்பட்டது.

அதன் திறப்பு விழா நிகழ்வு பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தலைமையிலும் நடைபெற்ற நிகழ்வில் பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பங்கேற்று ஏடிஎம் மையத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன்,பேரூராட்சி செயல் பொன்னுசாமி, வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் மரிய சார்லஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜேனேட் அலெக்ஸ் சிசிலீயா, வின்சியா, சத்தியா,சித்ரா, சுமதி மறறும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.