100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வழங்கவில்லை எனில் அதற்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும் என்று எம்பி செல்வராஜ் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வீ.தம்புசாமி மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் திருக்குவளை அருகே எட்டுக்குடியில் நடந்தது.
கட்சியின் துணை செயலாளர் மாசேத்துங் தலைமை வகித்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு பங்கேற்று வீ.தம்புராமியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தம்புசாமி கட்சிக்கு ஆற்றிய பணிகளையும் மக்கள் தொண்டையும் விரிவாக எடுத்துரைத்த செல்வராசு தொடர்ந்து பேசுகையில்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை முழுமையாக பெற்றது வெறும் 90 குடும்பங்கள் மட்டுமே. அதேபோல் குறைந்தபட்ச வேலை நாள் 23 நாட்களே கிடைத்துள்ளது. நாகை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 30 நாட்கள் வேலை கிடைத்துள்ளது

சட்டப்படி 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் பயனாளிகள் வேலையை கேட்டுப் பெறலாம். இல்லையெனில் பயனாளிகள் வழக்கு தொடர்ந்து மீதமுள்ள நாட்களுக்கான சம்பளத்தை பெற வகை செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தை மத்திய அரசு நிர்மூலம் ஆக்கி கொஞ்சம் கொஞ்சமாக சட்டத்தை செயல்படாத சட்டமாக மாற்ற சதி நடக்கிறது. அதற்கான நிதி குறைக்கப்பட்டு ஏழை எளிய மக்களை மீண்டும் பட்டினிக்கு செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்றார்.

தொடர்ந்து கட்சிக்கொடி ஏற்றப்பட்டு எட்டுக்குடி கடை தெருவில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையும் படிங்க : இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்

கூட்டத்தில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.பழனிச்சாமி , கட்சியின் மாநில குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலர் டி. செல்வம், கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.நாகராஜன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏ. ராமலிங்கம்,டி. கண்ணையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம். பர்ணபாஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் டி. பாலாஜி,விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜா அலாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்
இந்த விடியோவை பாருங்க: தமிழக அகதிகள் முகாமில் இருந்து கள்ளத்தனமாக ஆஸ்திரேலியா தப்ப முயன்ற ஆறு பேர் கைது