குத்தாலம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக அரசு மருத்துவமனை அருகில் மோடிஜி நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கி வருகின்றனர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனை அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது அறிவுறுத்தலின் படியும் மாவட்ட தலைவர் அகோரம் அவர்களது வழிகாட்டுதலோடு 30 நாட்களும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது

இதை அடுத்து ராம நவமியை முன்னிட்டு மோடிஜி நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் ஆர்வத்தோடு மோர் அருந்தி வருகின்றனர் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் இத்தகைய செயல் பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.