தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்உணவு & உடல் நலம்How toFashionLawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தரிசனம் 

உலக புகழ்பெற்ற பேராலயத்தில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா தரிசனம் ; பேராலய நிர்வாகம் சார்பாக வரவேர்ப்பளித்து மரியாதை சிறப்பு திருப்பலி:

மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் இன்று புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். நேற்றைய தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த மேகாலய முதல்வர், சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகைதந்து அங்கிருந்து சாலை மார்கமாக இன்று காலை வேளாங்கண்ணி வருகை புரிந்தார்.

பின்னர் இன்று காலை தனது மனைவி மெஹ்தாப் மற்றும் குடும்பத்தினருடன் மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா வேளாங்கண்ணி மாதாவை தரிசனம் செய்தார். பேராலயம் வந்த மேகாலயா முதல்வருக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ் பேராலய நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர் அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது

அதனை தொடர்ந்து தரிசனத்தை முடித்த மேகாலயா முதல்வர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து,விமானம் மூலம் பெங்களூர் செல்ல இருக்கிறார். மேகாலயா மாநில முதல்வரின் வருகையை அடுத்து மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்

READ  டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸினர் மாலை அணிவித்து மரியாதை

Share post:

Popular