நாகை அருகே ஆந்தகுடி கிராமத்தில் அமிர்தகணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆந்தகுடி கிராமம் ஸ்ரீ ராமர் மடத்தில் அமிர்தகணேஷ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி, நவகிரக கோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று காலை யாகசாலை பூஜை நிறைவு மற்றும் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து ஆலயத்தை மூன்று முறை வலம் வந்தனர். அதனை தொடர்ந்து ஆலய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விடியோவை பாருங்க: ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை நாகையில் கூட்டணி கட்சியான திமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினார்

பின்னர் கும்பாபிஷேக புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவரான அமிர்தகணேஸ்வரக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீவிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆந்தகுடி சிகார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: யாரும் செய்யாத ஒன்றை திரையுலகில் செய்த விஜய் ஆண்டனி!.. அட ரஜினியே பண்ணலயே!.
நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்