ஜப்பான் நாட்டின் முதன்மை கராத்தே பயிற்சியாளர் ஜென்ட்ஸ் இவாடா உலக சிட்டோரியோ கராத்தே அமைப்பின் தலைவர் தமிழக கராத்தே வீரர்களுக்கு சென்னையில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது
சென்னை அடையாறில் உள்ள யூத் ஹாஸ்டல் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்ட இந்தியாவிலேயே அங்கீகரிக்கப்பட்ட சிட்டோ ரியோ அமைப்பு அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே அமைப்பு அதன் கீழ் செயல்படும் தமிழக சிட்டோ ரியோ கராத்தே அமைப்பின் சார்பாக ஜப்பான் நாட்டைச் சார்ந்த உலக சிட்டோ ரியோ அமைப்பின் தலைவருமான ஜென்சோ இவாட்டா மூலம் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜென்சோ இவாட்டா கூறுகையில் தமிழகத்தில் உள்ள மாஸ்டர் அல்தாப் ஆலம் அவர்கள் நடத்திய கராத்தே வீரர்களுக்கு கராத்தே தற்காப்பு கலை உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும் அதில் ஒரு பகுதியாக தமிழக வீரர்களுக்கும் கற்றுக் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார்
பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பயிற்சியாளர்களுக்கு இவர் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார் அவரிடம் பயிற்சி பெற்ற குத்தாலம் தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் கரீம்கான் மற்றும் அவரது மாணவர்களும் ஜென்சோ இவாட்டா அவரிடம் இருந்து பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை அவர் வழங்கி போது எடுத்த படம்.