நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து விழா

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் இன்று திறந்து வைத்தார்கள்.
இந்த விடியோவை பாருங்க : கணவரின் தங்கையை காதலித்து கரம் பிடித்த மனைவி… குடும்பத்தார் போலீஸில் புகார்

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் டாட்டா நகர், சேவாபாரதி காமராஜ்நகர், அமிர்தா நகர் ஆகிய இடங்களில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து. அங்கான்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் இரா.மாரிமுத்து நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கீழ்வேளூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது, 750 கிராம் கஞ்சா பறிமுதல்