ஐசிஐசிஐ அறக்கட்டளை கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டம் (CSR) மூலம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ஒரத்தநாடு வட்டம்,
5 ஊராட்சியில் தொழில் முனைவோர் அலகு அமைத்து தரப்பட்டுள்ளது.
சிறு குரு விவசாயகுழுக்கள் மற்றும் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வாழ்வாதார நலனுக்காக ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியில் தேங்காய் சூரிய ஒலி உலர் ஆலை திருநாடு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு 8.5 லட்சம் மதிப்பிலும் கோவிலூர் ஊராட்சியில் தேங்காய் சூரிய ஒலி உலர் ஆலை விவசாய ஆர்வலர் குழுவிற்கு 8.5 லட்சம் மதிப்பிலும்,
தெலுங்கன்குடிகாடு ஊராட்சியில் தேங்காய் எண்ணை பிரித்தெடுக்கும் ஆலை மல்லிகை மகளிர் சுயஉதவி குழுவிற்கு 5.10 லட்சம் மதிப்பிலும்
பாப்பாநாடு ஊராட்சியில் தேங்காய் எண்ணை பிரித்தெடுக்கும் ஆலையை அண்ணா மறுமலர்ச்சி பெண்கள் சுயஉதவி குழுவிற்கு 5.10 லட்சம் மதிப்பிலும் சேதுராயன்குடிகாடு ஊராட்சியில் காளான் உற்பத்தி அலகை காளான் வளர்ப்பு குழுவிற்கும் 4.50 லட்சம் மதிப்பில் ஐந்து தொழில் முனைவு அலகை 31.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்து திறப்புவிழா மற்றும் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு ஒக்கநாடு கீழையூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் திரு. நவராஜா அவர்கள் ஐசிஐசிஐ பவுண்டேஷன் ஒரத்தநாடு வட்டத்தில் கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக செய்து வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் வேளாண்மைதுறை துணை இயக்குநர் திருமதி. வித்யா- ஐசிஐசிஐ வங்கி தஞ்சாவூர் களஅலுவலர்- பார்த்திபன், வோளாண்மை அலுவலர்- கனிமொழி, உதவி வோளாண்மை அலுவலர்கள்- ராஜ்குமார், கோவிந்தராஜ், ஒழுங்குமுறை விற்பனைகூடம் மேற்பார்வையாளர் சுரேஷ், தஞ்சாவூர் மார்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் சித்தார்தன், திருநாடு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் மதியழகன் ஒக்கநாடு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், திருநாடு உழவர் உற்பத்தியாளர் குழு முதன்மை செயல் அலுவலர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன் கள பணியாளர் சதீஷ் குமார் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.