மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பழையகூடலூர் கிராமத்தில் பழையகூடலூர் காளான் உற்பத்தி குழு சார்பாக சோழா காளான் வளர்ப்பு கூடம் திறந்து வைக்கப்பட்டது. சோழமண்டலம் கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேசன் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தது.

சோழா காளான் உற்பத்தி கூடத்தை ஊராட்சி மன்ற தலைவர் திரு பாண்டியன் அவர்கள் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட மகளீர் திட்டம், உதவி திட்ட அலுவலர் திரு மனுநீதி அவர்கள் திறந்து வைத்தார், இவ்விழாவில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் களப்பணியாளர் சிவானந்தம், சோழமண்டலம் கூட்டுப்பண்ணையம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெருந்தலைவர் இராஜேந்திரன். முதன்மை செயல் அலுவலர் ஹரிஷ். மகளீர் திட்ட அலுவலக அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.