spot_img
spot_img

Editor Picks

உலக தண்ணீர் தினம்-2023 முன்னிட்டு உள்நாட்டு மீன் வளர்ப்பு சிறுகுறு விவசாயிகளுக்கு pH மீட்டர் கருவி வழங்கும் நிகழ்ச்சி

Date:

மாவட்டம் வட்டம் 30 கிராமபுற வளர்ப்பு விவசாயிகளுக்கு ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் CSR நிதியின் மூலமாக pH மீட்டர் கருவி வழங்கும் நிகழ்ச்சி வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம்- சூரக்கோட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 200 சிறுகுறு மீன் வளப்பு விவசாயிகளுக்கு 200 pH மீட்டர் கருவி ரூபாய்.2,00,000 மதிப்பில் வழங்கப்பட்டது.

மேலும் ஆம்பலாபட்டு ஊராட்சியில் உள்ள 100 மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மீன்குளம் தண்ணீர் பரிசோதனை செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் நவராஜா,
ஐசிஐசிஐ பவுண்டேஷன் ஒரத்தநாடு வட்டத்தில் கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக செய்து வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்கத்தின் உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தில் குமார் பயனாளிகளுக்கு pH மீட்டர் பயன்படுத்தும் முறைகள் பற்றி நேரடியாக விளக்கி கூறினார்.

ஐசிஐசிஐ வங்கி தஞ்சாவூர் மண்டல தலைவர் சீனிவாசயோகனன்,
ஐசிஐசிஐ வங்கி கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், மீன்வளதுறை ஆய்வாளர் ஆனந்த், சிறப்புரையாற்றினார்கள்.

ஜெரால்டு மீன்வள உதவியாளர்,ராதிகா ஆய்வக உதவியாளர் விவசாயிகளின் மீன்குளத்து தண்ணீரை பரிசோதனை செய்து கொடுத்தனர். விவசாயிகள் அனைவருக்கும் pH மீட்டர் கருவியை சிறப்பு விருந்தினர் வழங்கினார். ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன் களபணியாளர் சாமுவேல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

Share post:

Popular