Water Bottle Cleaning Tips in Tamil: நம் உடல் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம் அதனால் தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். ஆகையால் அவ்வப்போது வீட்டில் உள்ள சொம்பு அல்லது டம்ளர் இவற்றை பயன்படுத்தி தண்ணீர் குடிப்போம், ஆனால் அலுவலகம் பள்ளிக் கூடம் மேலும் வெளிப்பயணம் செல்லும் போது குடிநீர் எடுத்து செல்வதற்கு தண்ணீர் பாட்டிலை பயன்படுத்துவது பழக்கம்.

அதனால் தினசரி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை இரண்டு நாளைக்கு ஒருதடைவையாவது சுத்தம் செய்யவேண்டியது மிகவும் அவசியம் .அப்படி சுத்தம் செய்யவில்லை என்றால் தண்ணீர் பாட்டிலின் உள்ளே கிருமிகள் தங்கி நம் உடலில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் நம்மில் பலபேர்கள் தண்ணீர்பாட்டிலின் உள்பகுதியை கழுவுவதற்கு சலித்துக்கொண்டு மேலோட்டமாக கழுவிவிட்டு மீண்டும் பயன்படுத்துகிறார்கள் இது மிகவும் தவறானது.

அதுமட்டுமல்லாமல் தற்போது கிடைக்கக்கூடிய பெரும்பாலான தண்ணீர் பாட்டில்களின் தண்ணீர் குடிக்கும் பகுதி மிகவும் சன்னமாக இருக்கிறது .இதன் உள்பகுதியினை சுத்தம் செய்வது கடினமானது .ஆகவே இனி தண்ணீர் பாட்டில்களின் உள்பகுதியை எளிமையாக சுத்தம் செய்யமுடியும்.

உங்களுக்கான டிப்ஸ் கீழே முயற்சித்து பாருங்களேன்.
இதையும் படிங்க: வாய்ப்புக்காக கிளாமர் ஆடையில் களமிறங்கும் ரச்சிதா.. அதிர்ந்து போன இணையவாசிகள்!

தண்ணீர் பாட்டிலின் உள்பகுதியினை சுத்தம் செய்வது எப்படி ?
டிப்ஸ் .1
உங்களின் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் அருந்தும் பகுதி பெரியதாக இருந்தால் சுத்தம் செய்வது மிகவும் எளியது. முதலில் பாட்டிலினுள்ளே வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி ,பிறகு பாத்திரம் கழுவும் லிக்குவிட் சிலதுளிகள் சேர்த்து பாட்டிலை நன்றாக குலுக்கவும் 5நிமிடம் கழித்து பாட்டில்கழுவும். பிரசினை கொண்டு நன்றாக தேய்க்கவும். கீழ் பகுதி ,சுற்றியுள்ளபகுதி மற்றும் மூடி இவைகளை நன்றாக தேய்த்து தண்ணீரினை ஊற்றி நன்றாக அலசவும். 4அல்லது 5தடவை குலுக்கி அலசவும் பிறகு வெய்யல் படும் பகுதியில் காயவையுங்கள், மூடிபோட்டு கொள்ளுங்கள்.

டிப்ஸ் 2:
உங்கள் தண்ணீர் பாட்டிலின் தண்ணீர் அருந்தும் பகுதி சிறியதாக இருந்தால் ப்ளீச் கொண்டு சுத்தம் செய்யலாம். அதற்கு தண்ணீர்பாட்டிலில் கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு குளிர்ந்த நீரை நிரப்பி மூடிபோட்டு மூடியபிறகு நன்றாக குலுக்கவும். பிறகு அப்படியே இரவுமுழுவதும் விட்டுவிட்டு, காலையில் எடுத்து மீண்டும் ஓடும் தண்ணீரில் அலசிவிட்டு வெய்யலில் காயவைக்கவும். இவ்வாறு செய்வதால் பாட்டிலில் இருக்கும் பாக்டிரியாக்கள் எளிதில் அழிந்துவிடும். நோய்த்தொற்று பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்படும்.
Video : நெஞ்சு வலி Vs மாரடைப்பு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..? கண்டறியும் அறிகுறிகள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்