Homeவாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2023 | Vinayagar Chaturthi Valthukal

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2023 | Vinayagar Chaturthi Valthukal

Date:

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்: இந்து மக்கள் வழிபடும் முக்கிய தெய்வம் விநாயகர் இவரே முழு முதல் கடவுளாக இருக்கிறார். இவர் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி என்று வருடந்தோறும் ஆவணி திங்கள் வளர்பிறை சதுர்த்தி அன்று இந்திய மக்களால் இந்தியா முழுவதும் கொண்டப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஆவணி 25-ம் நாள் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இத்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாவாக விநாயகர் சதுர்த்தி கருதப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து களிமண்ணால் விநாயகரை செய்து வீடு அல்லது பொது இடத்தில் வைத்து வணங்குவார்கள்.
அந்த சமயத்தில் முதல் கடவுள் விநாயகருக்கு பிடித்த அருகம் புல், சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை கடவுளுக்கு வைத்து படைத்தது வழிபடுவார்கள். பின்னர் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை குளம், கடல், ஆறு போன்ற இடங்களுக்கு எடுத்து சென்று தண்ணீரில் கரைத்து விடுவார்கள்.

இத்தகைய தினத்தன்று தங்கள் வாழ்த்துக்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் தெரிவித்து கொள்வார்கள்.

இப்பதிவில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கலாமா, வாங்க..

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

அனைவரும் நலம் பெற்று வாழ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

உலகம் என்பது தந்தையும் தாயும் என்று
உலகிற்கு உணர்த்திய முதற்கடவுள் நீ
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும்
பெற்று நலமுடன் வாழ்க நலமுடன்.!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…!

காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை.
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…!

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்.
மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்…!

ஞானம், ஆரோக்கியம், செல்வம்
உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித்தரும்
விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு

நாம் நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று
சிறப்பாக வாழ்வோம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…!

வெற்றி விநாயகர்
புதிய வெற்றிகளை தந்து
உங்களை வழி நடத்தட்டும்…!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…!

வெற்றி கணபதி புதிய வெற்றிகளை குவித்து, உங்களை வளப்படுத்தட்டும்!
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

உன்னை நினைத்து உயிர் உருகி செய்யும் செயல் ஆகுமே,
விஜயமாக்குபவனே, முழுமுதற் கடவுளே, வினைதீர்க்கும் விநாயகனே,
விநாயகர் சதுர்த்தி கொண்டு உம்மை அடிப்ணிந்து வணங்குகிறோம், காத்தருள்வாய் கணேசா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related