இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் சட்ட மாமேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு தொழிலாளர் சங்கத்தின் கண்டோன்மெண்ட் அலுவலகம் முன்பு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தொழிற்சங்கத்தின் முன்னாள் செயலாளர்,R.மனோகர் தலைமை வகித்தார்,S.பரமேஸ்வரி சங்கத்தின் பொருளாளர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மேலும் இதில் .E.பழனி,R.மனோகர்,ஜகாங்கீர்,AITUC செங்கல்பட்டு மாவட்ட செயலாளர், ஜா.பூபாலன் Ex VP,CB ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

K.ரவி,பம்மல் A.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இதில் சங்க நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். K R.மோசஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். D.பாபு அவர்கள் நன்றியுரையாற்றினார். இதில்
இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும். மேலும் இதில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது