Homeசுயசரிதைடோலி சிங் வாழ்க்கை விபரம், திரைப்படங்கள், உயரம், வயது மற்றும் படங்கள்

டோலி சிங் வாழ்க்கை விபரம், திரைப்படங்கள், உயரம், வயது மற்றும் படங்கள்

Date:

இந்திய யூடியூபர் ஆக இருக்கிறார் டோலி சிங் இதைத்தாண்டி பிளாக்கர், கன்டென்ட் கிரேட்டர் மற்றும் செல்வாக்கு உள்ளவராக சமூக ஊடகங்களில் திகழ்கிறார். தனது யூடியூப் சேனலில் ‘ராஜூ கி மம்மி சாட் ஷோ’வில் ‘ராஜூ கி மம்மி’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 2023 ஆம் ஆண்டில், Bhaag Beanie Bhaag தொடரின் மூலம் டோலி நடிகையாக அறிமுகமானார்.

டோலி சிங்

அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டில் Dream Boy என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு Modern Love: Mumbai மற்றும் Double XL படங்களில் நடித்தார். Double XL படத்தில் மீராவாக நடித்து இருந்தார். Double XL படத்தில் மீராவாக நடித்ததற்கு விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றார்.

2023 ஆம் ஆண்டில், Thank you for coming திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

டோலி சிங்

உடல் புள்ளிவிவரங்கள்

டோலி சிங் உயரம் சென்டிமீட்டரில் – 157 செ.மீ, மீட்டரில் – 1.57 மீ, அடி மற்றும் அங்குலங்களில்- 5’ 5” ஆகும். தோராயமாக எடை கிலோகிராமில் – 47 கிலோ, பவுண்டுகளில் – 104 பவுண்டுகள், கண் நிறம் – கருப்பு,
முடி நிறம் – டார்க் பிரவுன்

டோலி சிங்

தனிப்பட்ட வாழ்க்கை

பிறந்தவருடம் 1993, ஆம் ஆண்டு பிறந்தார்
பிறப்பிடம் – நைனிடால், உத்தரகண்ட், இந்தியா.
சொந்த ஊர் – நைனிடால், உத்தரகண்ட், இந்தியா.
இவரின் இரத்த வகை B பாசிட்டிவ், டோலி சிங் அசைவ பிரியர் அவர்.
டோலி சிங்கின் உடன்பிறந்த சகோதரர் அன்மோல் சிங் இவர் தொழில்முறை புகைப்பட கலைஞர் அவர்.

கல்வி தகுதி மற்றும் கல்லூரி

டோலி சிங் Kirori Mal College, University of Delhi கல்லூரியில் இளங்கலை கலை (மாண்புகள்) அரசியல் அறிவியல் ( Bachelor of Arts (Hons.) Political Science ) படித்தார் மேலும் National Institute of Fashion Technology, Delhi கல்லூரியில் ஃபேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுநிலை பட்டம் பெற்றவர் ( Masters in Fashion Management )

பிடித்த விஷயங்கள்

நடிகர் – டேனியல் ராட்கிளிப் ( Daniel Radcliffe)
பாடகர் – மைலி சைரஸ் (Miley Cyrus)

டோலி சிங்

டோலி சிங் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்கள்

  • டோலி சிங் தனது வேடிக்கையான வீடியோ மற்றும் ஃபேஷன் வீடியோ மூலம் சமூகவலைத்தளங்களில் பிரபலமானார்.
  • மேலும் பிரபலமான iDiva இல் பிரபலமான கன்டென்ட் மேம்பாட்டாளராகவும் இருந்துஉள்ளர்.
  • தனது சொந்த YouTube சேனலையும் நடத்தி வருகிறார்.
  • எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர் டோலி சிங்.
  • தனது சொந்த யூடியூப் சேனலான ‘மை ரியல் ஹவுஸ் டூர்’ இல் நைனிடாலில் உள்ள தனது பெற்றோரின் வீட்டைக் காண்பிக்கும் வீடியோவையும் பதிவுசெய்து இருந்தார். இந்த வீடியோ எடிட்டிங் இல்லாமல் அசல் உள்ளடக்கத்தை பதிவுசெய்து இருந்தார். யதார்த்தத்தை வெளிப்படுத்திய இந்த வீடியோ ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.
  • டோலி சிங்கின் குழந்தை பருவம் கடினமானதாக இருந்து உள்ளது. சிறிய வீட்டில் வசித்து உள்ளார்.
  • இவர்களின் பரிசுக் கடையான ‘அப்னா பஜாரில்’ நாள் முழுவதும் பெற்றோர் வேலை செய்து உள்ளனர்.
  • டோலி தனது சகோதரனை வீட்டில் பார்த்துக் கொள்வாராம்.
Dolly Singh டோலி சிங்

டோலி Kirori Mal College யில் பட்டப்படிப்பை முடித்த பிறகு MBA க்கான பொதுவான நுழைவுத் தேர்வான CAT தேர்வு எழுதுவதற்கு ஒரு வருடம் இடைவெளி எடுத்தார். CAT தேர்வில் வெற்றி அடைய முடியாததால் NIFT தேர்வில் கலந்து கொண்டு தேர்வுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல், அகில இந்திய ரேங்க் 3 ஐயும் பெற்றார்,
மேலும் டெல்லியில் உள்ள National Institute of Fashion Technology யில் சேர்ந்தார், அங்கு அவர் ஃபேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப் படித்தார்.

Dolly Singh டோலி சிங்

டோலி தனது முதுநிலைப் படிப்பைத் தொடரும் போது, சமூக வலைத்தளங்களில் ‘Spill The Sass’ என்ற ஃபேஷன் பக்கத்தை தொடங்கினார். அதில் அவர் ஃபேஷன் சம்பந்த பட்ட ஆடை ஹேக் வீடியோக்கள், ஆடை ஷாப்பிங் வீடியோக்கள், பட்ஜெட் ஸ்டைலிங் வீடியோக்களை பதிவிட்டு புதிய ஃபேஷன் ட்ரெண்ட் செட்டர் அமைத்தார்.

இந்தியப் பெண்களுக்கான ஸ்டைல் மற்றும் அழகு குறிப்புகள், உறவு ஆலோசனைகள், பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் பிரபலங்களின் கிசுகிசுக்களை வழங்கும் ஆன்லைன் தளமான ‘iDiva’ இல் தனது பட்டமளிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்டர்ன்ஷிப்பை தொடங்கினார்.

டோலி சிங்

iDiva உடன் அவரது இன்டர்ன்ஷிப் முடிந்ததும், ஒரு எழுத்தாளர் வேலையை டோலி சிங்க்கு கொடுத்தனர். டோலி சிங் ஒப்பனையாளர் ஆக வேண்டும் என்று விரும்பினாலும், அவர் அந்த எழுத்தாளர் வேலையை ஏற்றுக்கொண்டார். அப்போது அந்த நாட்களில், iDiva நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் வீடியோக்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. நடிகர்கள் பற்றாக்குறையாக iDiva -வில் இருந்ததால், அனைத்து ஊழியர்களும் மல்டி டாஸ்கிங் செய்யும் சூழுல் ஏற்பட்டது. டோலி சிங் எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார், ஆனால் முடிவில் ஒரு நடிகராக மாறினார்.

ஆரம்ப காலத்தில், ஊழியர்கள் வீடியோக்களை படமாக்கும்போது நிறைய சிரமங்களை எதிர்கொண்டுஉள்ளனர், ஆனால் விரைவில் அதனை நிறுத்தி விட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, iDiva இயக்குனர் சாந்து மிஸ்ரா, ஒரு புதுவிதமான யோசனையை சொல்லி உள்ளார். ‘South Delhi Girls’ என்ற வீடியோ தொடரில் இணை நடிகை குஷா கபிலாவுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.

டோலியின் வாழ்க்கையில் பொன்னான மைல்கல்லாக இருந்தது ‘South Delhi Girls’ இதன் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார். பின்னர் Bhaag Beanie Bhaag, Dream Boy, Modern Love: Mumbai, Double XL , Butterflies தொடர் மற்றும் படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க : நடிகை சயாமி கெர் வாழ்க்கை விபரம், திரைப்படங்கள், உயரம், வயது மற்றும் படங்கள்

டோலி தனது பள்ளி வாழ்க்கையில் கொடுமைப்படுத்தப்பட்டதாக குறிக்கிறார். குறிப்பாக ஒல்லியாகவும், கருமையான சருமத்திற்காக கேலி செய்து உள்ளனர். இவரின் பள்ளித் தோழிகள் kaali ladki என்றும் ‘Sukhi Dandi’ மற்றும் bag of bones என்று கிண்டல் செய்து உள்ளனர். சக மாணவர்களால் மட்டுமில்லாமல் ஆசிரியர்களாலும்
அவமானப்படுத்தியுள்ளனர். ஒரு நேர்காணலில், அவர் தனது ஆசிரியர்களால் அவமானப்பட்டதையும் மற்றும் farewell விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாத சம்பவத்தை கூறியுள்ளார். விழாவிற்கான Dress code இல்லை என வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

டோலி சிங்கின் பிரபலமான கதாபாத்திரமான Raju Ki Mummyயாக நடிக்கும் போது பிரபலங்களுடன் நேர்காணல் செய்கிறார். மேலும் பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மான் குரானா, கங்கனா ரனாவத், கரீனா கபூர், நவாசுதீன் சித்திக், பங்கஜ் திரிபாதி போன்ற பல பாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து வீடியோக்களை எடுத்து உள்ளார்.

அதிமாக டோலி சிங் பற்றி கேட்ட கேள்வி மற்றும் பதில்கள்!

ஏன் டோலி சிங் பிரபலமானார்? (Why is Dolly Singh famous?)

டோலி சிங் ஒரு பிரபலமான கண்டெண்ட் கிரேட்டர் , யூடியூப் சேனலில் ‘ராஜூ கி மம்மி சாட் ஷோ’வில் ‘ராஜூ கி மம்மி’ (Raju Ki Mummy) கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

டோலி சிங் கண்டெண்ட் உருவாக்கியவர் யார்? (Who is Dolly Singh content creator?)

அவருடைய கண்டெண்டை அவரே உருவகிக்கிறார்.

டோலி சிங் கேன்ஸில் ஏன்? (Why Dolly Singh in Cannes?)

டோலி சிங் திரைப்பட ஆர்வலரும் கூட, உலகம் முழுவதிலுமிருந்து சினிமா பார்ப்பதை விரும்பியுள்ளார். Modern Love: Mumbai, Double XL , Butterflies ஆகிய OTT தொடரில் பணிக்காக நன்கு அறியப்பட்டவர்.எனவே இவர் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார்

வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன.?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related