spot_img
spot_img

Editor Picks

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு 

Date:

தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் ரூபாய் 22 லட்சம் செலவில் நடைபெற்று வரும் கழிப்பறை பணி,ரூபாய் 75 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி,வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி, குத்தாலம் அரசு மருத்துவமனை ஆய்வு பேரூராட்சி பகுதியில் வீடுகளில் தூய்மை பணியாளர் மூலம் குப்பைகள் சேகரிக்கும் பணி ஆய்வு போன்ற அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நான் ஆய்வு மேற்கொண்டேன்.குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 15 வது மானிய குழு திட்டத்தில் ரூபாய் 22 லட்சம் செலவில் நடைபெற்று வரும் கட்டண கழிப்பறை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாக முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் செலவில் புது நகர்,காளியம்மன் கோவில் தெரு,ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.

பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் வீட்டிற்கு சென்று தூய்மை பணியாளர் மூலம் சேகரிக்கும் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் தோப்பு தெருவில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.

தொடர்ந்து குத்தாலம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் உள் நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு,புற நோயாளிகள் பிரிவு,அறிவை அரங்கம் மருந்து பிரிவு போன்ற பிரிவுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.

பின்னர் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 40 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட துணிப்பை விற்பனை இயந்திரத்தை திறந்து வைத்தேன்.பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களையும் வளர்ச்சி பணிகளையும் குறித்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன்,பேரூராட்சி துணைத் தலைவர் சம்சுதீன்,பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித்,பொறியாளர் சுப்பிரமணி,இளநிலை உதவியாளர் சுந்தர், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Share post:

Popular