ராகுல் காந்தியின் எம் பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
காங்கிரஸ் கட்சியினர் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அனகாபுத்தூர் நகர தலைவர் அப்துல் காதர் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் பழிவாங்காதே பழிவாங்காதே ராகுல் காந்தியை பழிவாங்காதே துணை போகாதே துணை போகாதே அதானிக்கு துணை போகாதே போன்ற மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் இட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எஸ்.டேனியேல், பம்மல் பாலு, ஏ.எம்.மோகன், மூர்த்தி,அனகை பாபு, வேலாயுதம், விஜயன், டி.ஆர். பாண்டியன், ஜெகதீசன், சரவணன், கமலக்கண்ணன், ஆறுமுகம் நாகராஜன், ஸ்ரீதர், ராமமூர்த்தி, வேலன்,சக்தி, அமரலிங்கம், கிருஷ்ணா,வேலு மேஸ்திரி ,அசோக், சுந்தர், சம்பத்குமார், தேவராஜன், முரளி, பரணி, கல்யாணராமன், ரமேஷ், பெருமாள், அருள்மணி, தருண், வினோத், ரியாஸ்,மற்றும் மகளிரணியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்