மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜம்பு கென்னடி தலைமை வகித்தார்.

குத்தாலம் நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பி.டி சூர்யா முன்னிலை வகித்தார்.வட்டார காங்கிரஸ் தலைவர் பரதன் வரவேற்றார்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பேசினார் பின்னர் கண்டன முழக்கமிட்டு அக்கட்சியினர் எதிர்ப்பை தெரிவித்தனர்
இதையும் படிங்க : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதவி நீக்கம் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருநீர்மலையில் கண்டன தெருமுனை கூட்டம்

இதில் மாநில பொதுச் செயலாளர் சீர்காழி கே.பி.எஸ்.எம் கனிவண்ணன்,மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரியாத் அஹமது.காங்கிரஸ் வட்டார தலைவர் மதி,சீர்காழி நகரத் காங்கிரஸ் தலைவர் லட்சுமணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ் ராஜேந்திரன்,மயிலாடுதுறை நகர காங்கிரஸ் தலைவர் ராமானுஜம்,பூர்விகா செந்தில்,சண்முகம்,ஹபீப் ரஹ்மான், சதீஷ்குமார்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விடியோவை பாருங்க : பீகார் youtuber தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது- மதுரை போலீஸ் எஸ் பி தகவல்