கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் இயங்க முடியாத சூழலில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்புவதற்காக இல்லம் தேடிக் கல்வி உட்பட பல திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது இதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் கற்றலை வலுப்படுத்த ‘ எண்ணும் எழுத்தும் ‘ திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது
இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி ‘இந்த திட்டத்தின் தாக்கத்தை மக்களிடம் முக்கியமாக பெற்றோர்களிடம் கொண்டு செல்ல எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்கின்ற நிகழ்வு மார்ச்-16 முதல் மார்ச்- 21ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் கடந்த 19 ம் தேதி எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கீழ்வேளூர் ஒன்றிய ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதையும் படிங்க : மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periods
பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் பள்ளி மாணவர்களின் ஆடல் பாடல், நாடகம், மாறுவேடம், விளையாட்டுகளோடு எண்ணும் எழுத்தும் கற்றலை பெற்றோர்களுக்கு மாணவர்கள் செய்து காட்டினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் , மாணவர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளை வட்டார கல்வி அலுவலர்கள் வழங்கினர் இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த விடியோவை பாருங்க : உங்கள் கனவில் ஒரு நகரத்தை கண்டால் அதன் பலன் என்ன தெரியுமா?