மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் கொரோனா பரவலை முன்னிட்டு அதற்கான ஒத்திகை இன்று மருத்துவமனையில் டீன் ரத்தினவேல் முன்னிலை நடத்தப்பட்டுள்ளது.
இதில் கொரோனா பாதித்த நோயாளியை எப்படிப் மருத்துவமனை அழைத்து வந்து சிகிச்சை வழங்கப்படும் என செய்முறையில் விளக்கப்பட்டது.

திடீரென அம்புலன்ஸில் கொரோனா உடை அணிந்த செவிலியர்கள் நோயாளிகள் போன்ற பொம்மையுடன் இறக்கியதால் அங்கிருந்த பொதுமக்கள் வேக வேகமாக பையில் இருந்த முகக் கவசத்தை எடுத்து மாட்டினர்.