திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகருக்கு பிடித்த உணவுகளை செய்து வணங்குவோம். அதில் சுண்டல், கொழுக்கட்டை லட்டு, சர்க்கரை பொங்கல், எள்ளு உருண்டை போன்ற உணவு வகைகளை செய்து சாப்பிடுவார்கள்.

அதில் லட்டு என்றால் பெரியவர்கள், முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் 10 நிமிடத்தில் ரவா லட்டு செய்வது எப்படி பார்ப்போம்.
▶ தேவையான பொருட்கள்
➦ ரவா-1கப்
➦ முந்திரி -75கிராம்
➦ ஜீனி -3/4கப்
➦ உலர்ந்த திராட்சை -50கிராம்
➦ நெய் -100கிராம்
➦ ஏலக்காய் -5 [தூள் செய்து கொள்ளவும் ]
➦ பால் -தேவையான அளவு
➦ முந்திரி -5
➦ பாதம் -5

❖ முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி ,பாதம் திராட்சை போட்டு வதக்கி கொள்ளவும். திராட்சை அதனுடன் பொரித்த ஒரு கப் ரவா சேர்த்து வதக்கி கொள்ளவும்.
❖ ரவா வதங்கி வாசம் வந்தவுடன் 1/2 கப் தேங்காய் கலந்து வதக்க வேண்டும் இதில் சேர்க்கக்கூடிய தேங்காயை தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்து வதங்கி கொண்டுள்ள ரவாவில் சேர்த்து கொள்ளவும்.
❖ ஒரு கப் ரவாவிற்கு 3/4 கப் ஜீனியினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
❖ வதக்கிய பொருட்களானது உதிரி உதிரியாக வரும் போது அடுப்பினை அணைத்து கொள்ளவும்.
❖ அடுத்து வதக்கி வைத்துள்ள ரவாவை கையில் தொடுகிற பதத்தில் சூடு குறைந்ததும் காய்ச்சிய பசும் பால் 3 தேக்கரண்டி சேர்த்து உருண்டையாக பிடிக்க வேண்டும்.
▶ இந்த வீடியோ பாருங்க ➡️ தினமும் இரவு ஒரு டம்ளர் சீரகத் தண்ணீரைக் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்