மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது மழலை குரலில் தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பு:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70வது பிறந்தநாளை பல்வேறு இடங்களில் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகள் 200 பேருக்கு தமிழ்-ஆங்கிலம் அகராதிகளை வழங்கினார்.

தொடர்ந்து தற்போதைய தமிழக முதல்வருக்கு முன்னாள் தமிழக முதல்வர் பயின்ற பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது மழலை குரலில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.