மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் அம்பேத்கர் 133-வது பிறந்தநாள் விழா விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு குத்தாலம் ஒன்றிய பொறுப்பாளர் டி.பி.சாமி சுபாஷ் தலைமை தாங்கினார். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் செல்லப்பா, துணைத்தலைவர் மதன்மோகன், முகாம் செயலாளர் பிரசன்னா,முகாம் துணை செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகி அபி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக விசிக பூம்புகார் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பூவைஅன்பரசன் கலந்துகொண்டு விசிக கொடி ஏற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் செங்குடி விசிக முகாம் அமைப்பாளர்கள் வினோத்,காசிராஜன்,எஜமான்,மணிகண்டன்,ஜனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற பெயர் பலகை திறப்பு விழாவும் நடந்தது.