காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பாஜக அரசு தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் அருகில் பம்மல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் பம்மல் பாலு அவர்களின் தலைமையில் கண்டன தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். பேசிய பின்னர் பாஜக அரசுக்கு எதிராக துண்டறிக்கை ஒன்றை பொதுமக்கள் வணிகர்கள் என அனைவருக்கும் வழங்கினர்.இந்நிகழ்சியில் கட்சியின் பல்வேறு துறைகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்