தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்How toFashionஉணவு & உடல் நலம்LawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

வலிவலம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலிவலத்தில் ஊராட்சியில் தலைவர் செ.மணிகண்டன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் இலக்கியா பழனிவேல் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பற்றாளர் வளர்மாலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம். 70 சதவீதம் நீரினாலும் 30 சதவீதம் நிலப்பரப்பை கொண்டுள்ள நமது நாட்டில் 2.5 சதவீதம் மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் உள்ளது இதில் மூன்றில் ஒரு பங்கு பாதுகாப்பற்ற சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்ட மாசுபட்ட தண்ணீரை பயன்படுத்துகிறோம் எனவே மக்கள் தண்ணீரை வீணடிக்காமல் தேவையான அளவிற்கு பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் கிடைக்கும் மழை நீரை முறையாக சேமித்து நிலத்தடி நீரை பெருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இதற்காக தமிழக அரசு பல திட்டங்களையும் அறிவித்துள்ளது அதை நமது ஊராட்சியில் முறையாக பயன்படுத்தி வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இல்லாத ஊராட்சியாக மாற்றிட வேண்டுமென தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பேசிய விழிப்புணர்வு காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது

தொடர்ந்து ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் பொதுமக்களுக்கு வாசிக்கப்பட்டது கிராம சபை கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீ கமலி, கிராம நியாய விலை கடை பணியாளர் பழனிவேல், கிராம செவிலியர், அங்கன்வாடி பணியாளர், வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

READ  நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து விழா

Share post:

Popular