எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுதலை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இரண்டு விசைப்படகுடன் கடந்த 12ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த மணி, ராஜா,ரவி,மதிபாலன், காதலிங்கம, ரகு, வேல்மையில், ராமமூர்த்தி,அன்பு, தினேஷ்,சித்திரவேல், ரவி ஆகியோர் விடுதலை.
நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்