spot_img
spot_img

Editor Picks

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விசைப்படகுடன் கைது

Date:

எல்லை தாண்டி பிடித்ததாக மாவட்ட கள் 12 பேர் விசைப்படகுடன் கைது: மீனவர்களையும் படகினையும் மீட்டுத் தரக்கோரி உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீன்பிடி துறைமுகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடந்த 7ம் தேதி அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில் விஜயா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த ஆனந்தமணி,ராஜா, வீ.ரவி,மதிபாலன், காத்தலிங்கம், வேல்மயில், ராமமூர்த்தி,அன்பு,சா.ரவி மற்றும் கிச்சாங் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரகு,தினேஷ், சித்திரவேல் உள்ளிட்ட 12 மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் 30 நாட்டிகல் மைல் தொலைவில் அனலைதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக விசைப்படகுடன் 12 மீனவர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை விசைப்படகுடன் சேர்த்து கைது செய்த நிலையில், மொத்தம் 16 மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்டு தர வேண்டுமென உறவினர்கள் மற்றும் மீனவ கண்ணீர் மல்க அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நகை மற்றும் வங்கி கடன் பெற்று வாங்கியதாகவும்,தங்களது வாழ்வதாரமாக திகழும் விசைப்படகை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மீடடு தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். தங்கள் படகை மீட்டு தரவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டியிருக்குமெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் கைது நடவடிக்கையால் மீனவர்களிடையே அச்சத்தையும் பீதியும் ஏற்படுத்தி உள்ளது.

Share post:

Popular