தமிழகம், புதுச்சேரியில் +1 பொதுத்தேர்வு சற்றுமுன் தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணாக்கர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள், 125 சிறைவாசிகள், 5,338 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3,184 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.