இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு பேரவையில் ரூபாய் 1.5 லட்சம் கட்சி நிதி வழங்கப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியம் சார்பில் நிதியளிப்பு பேரவை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது .
நிதியளிப்பு கூட்டத்தில் நாகை மக்களவை உறுப்பினரும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் கலந்துகொண்டு அரசியல் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான நிதியளிப்பு பேரவையில் முதற்கட்ட நிதியாக ரூபாய் 1.50 லட்சம் மாவட்ட மையத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன்,மாவட்ட பொருளாளர் ஆர். கே. பாபுஜி, மாவட்ட துணைச் செயலாளர் கே.பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் எம் .கே. நாகராஜன், வி .எம். மகேந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மேகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.