முகப்புஇன்றைய செய்திகள்அரசியல்தமிழகத்தில் இந்தி திணிப்பு நடக்கிறது என்று யாரேனும் நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என...

தமிழகத்தில் இந்தி திணிப்பு நடக்கிறது என்று யாரேனும் நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அர்ஜுன் சம்பத் பேட்டி

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்துமக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ராம ராஜ்ய ரதயாத்திரை தமிழகம் வருவதை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

*தொடர்ந்து அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது;

தேவர் ஜெயந்தி அன்று மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரியில் சில இளைஞர்கள் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

தேவர் குருபூஜையை அரசியல் கட்சியினர் ஜாதிய விழாவாக நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.

கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பத்தில் போதே இதில் ஐஎஸ்ஐஎஸ்ஐ அமைப்பு ஈடுபட்டிருக்கும் என்று கணித்தோம்., தற்போது போலீசார் மற்றும் என்ஐஏ விசாரணை தெரிய வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் இன்றளவும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல் இருக்கின்றனர்.

ஜமாத்தார்கள் கோவில்களுக்கு வந்து மத நல்லிணக்கத்தை பேணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கின்றோம்.

அதேபோல் கோட்டை ஈஸ்வரன் கோவில் ராஜா கோபுர திருப்பணி நடைபெறாமல் இருந்து வருகிறது. அதனை விரைந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு மீண்டும் தடைவிதிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

நாடுமுழுவதும் மிசாவை எதிர்த்து திமுகவுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு இணைந்து செயலாற்றி தேசபக்தியை நிரூபித்து உள்ளது. எனவே முதல்வர் நடுநிலையாக செயல்பட்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு விசிக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் முட்டுக்கட்டையாக இருக்கிறது. , தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்து திணிப்பு உள்ளது என்று கண்டறிந்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

தமிழகம் சங்கீகளின் பூமிதான்.

சென்னையில் மழை வெள்ளம், நிவாரணம் மற்றும் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். 2 பேர் இது வரையில் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ள மீட்பு பணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மக்கள் கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

தற்போது ஆரஞ்சு பாக்கெட் பாலுக்கு விலையை உயர்த்துவது என பால் விலையை மறைமுகமாக உயர்த்தி உள்ளது.

தற்போது ஸ்டாலினை நிம்மதியாக தூங்க விடமாட்டார்கள் திமுக அமைச்சர்கள், குறை கூற வரும் பொதுமக்களை அவமரியாதை செய்து கொண்டே வருகிறார் அமைச்சர் பொன்முடி.

பெண்களை அவதூறாக பேசியவர்களுக்கு எதிராக அண்ணாமலை போராட்டம் நடத்தியதால் கைது, சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்தும் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஆளுநர் தமிழகத்தில் நடைபெறுவதை எடுத்துரைக்கிறார். பிரிவினை வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

கடந்த ஆண்டும் ராம ரதயாத்திரைக்கு திராவிட இயக்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர், இந்த முறையிலும் தடுக்க முயற்சி செய்வார்கள். அதனை முதல்வர் நடுநிலை தன்மையுடன் செயல்பட வேண்டும்.

அண்ணாமலை மட்டும் குண்டு வெடிப்பு பற்றி பேசாமல் இருந்திருந்தால் சம்பவத்தை முற்றிலும் மூடி மறைத்து இருப்பார்கள், அண்ணாமலையை என்ஐஏ தாராளமாக விசாரிக்ககட்டும், விசாரணையின் போது அவரிடம் இருக்கும் ஆவணங்களை ஒப்படைப்பார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!