மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் தினமும் பசியால் வாடி நிற்கும் சாலையோர வாசிகளை கண்ட இவர் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையிலும் தினமும் உணவு வழங்கின்றார்.
450 வது நாளான இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் ரத்னவேல், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் நாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசும்போது உலகத்தில் மனதிற்கு இன்பம் அளிப்பது கொடுப்பது தான் இருக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றார் மகாகவி பாரதி. அந்த வகையில் மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் வறியவர்களுக்கும், மனநலம் பாதித்தவர்களுக்கும் சாலையோர வாசிகளுக்கும் தொடர்ச்சியாக 450 நாட்களுக்கும் மேலாக மதிய உணவு வழங்கி வருகிறது இந்த அட்சய பாத்திரம். தொடர்ந்து உணவு தானம் வழங்கிட தொழிலதிபர்கள், நிறுவனர்கள், மேலாளர்கள், அலுவலர்கள் உதவ வேண்டும் என்றார்.
இவரது சேவையினை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல், நடிகர் வையாபுரி பாராட்டினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.