October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை அன்று குத்தாலம் ஒன்றிய நகர திமுக சார்பில் குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம்,மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் க.அன்பழகன்,ஒன்றிய செயலாளர்கள் வடக்கு குமார.வைத்தியநாதன்.கிழக்கு மங்கை.சங்கர்,மேற்கு இராம ராஜேந்திரன்.பேரூர் செயலாளர் எம்.சம்சுதீன்,ஊராட்சிமன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படம்:குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க