முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்குத்தாலத்தில் ஆதரவற்ற மனநலம் பாதித்தவர் சாவு

குத்தாலத்தில் ஆதரவற்ற மனநலம் பாதித்தவர் சாவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேரடி பகுதி யைப் சேர்ந்தவர் அப்பு என்கிற முத்து (வயது-60 )இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் அப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவு காரணமாக 8-ந்தேதி இரவு அங்குள்ள கன்னியம்மன் கோயில் வளாகத்தில் இறந்து கிடந்துள்ளார்.

மறுநாள் காலை அவர் இறந்து கிடப்பதையறிந்த அப்பகுதி மக்கள் குத்தாலம் பேரூராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்து குத்தாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குத்தாலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ‌‌பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்தவர் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் உடல்நலம் சரியில்லாமல் இறந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் இறந்த முத்துவின் உடலை அடக்கம் செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!