Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது.

சினிமா துறை தற்போது ஒரு நிலையான தொழிலாக வளர்ந்து வருகிறது. அதே சமயம் தமிழ் சினிமா துறை கடந்த காலத்தை விட பாரிய வளர்ச்சி எட்டியுள்ளது. டார்க் ரூம் கிரேஷன்ஸ் தயாரிப்பில் கௌசல்யா விக்ரமசிங்கே இணைந்து தயாரித்து ஏ.டி.ஞானம் இயக்கியுள்ள படம் ‘செகண்ட் ஷோ’.

இப்படத்தில் இலங்கை நடிகர்கள் மற்றும் இந்திய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் இலங்கையின் முன்னணி நடிகர் ஹேமல் ரன்சிங்கே மற்றும் கோலிவுட் பிலிம்பேர் விருது பெற்ற அஜ்மல் அமீர், பிரபல மராத்தி நடிகை பல்லவி சுபாஷ் மற்றும் கோலிவுட் நடிகை வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரணீவ் வெர்ல் மற்றும் டாக்டர் அம்பி சுப்ரமணியம் ஆகியோர் இசையமைத்துள்ளனர். விஜய் ஒளிப்பதிவு. இப்படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாகிறது. இப்படம் ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.இப்படம் முழுமையாக லண்டனில் எடுக்கப்பட்டுள்ளது .

இப்படத்தை பற்றி இணை தயாரிப்பாளர் கௌசல்யாவிடம் கேட்டபோது, ‘சுமார் 15 வருடங்களாக திரையுலகில் உள்ள நான் வேட்டகாரன், சூரியவன்ஷி போன்ற வெற்றிப் படங்களை இலங்கைக்கு விநியோகித்துள்ளேன். அந்த வகையில் நான் தயாரித்த முதல் படம் ‘செகண்ட் ஷோ’. தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. என்னுடைய அடுத்த படம் சிங்களம் – ஹிந்தி படம் என்றும் அவர் கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க