முகப்புபொழுதுபோக்குநடிகைகள்இதனால தான் உடல் எடையை குறைச்சேன்.. சோகக்கதையை சொன்ன ஐஸ்வர்யா மேனன்.!

இதனால தான் உடல் எடையை குறைச்சேன்.. சோகக்கதையை சொன்ன ஐஸ்வர்யா மேனன்.!

ஐஸ்வர்யா மேனன் தான் உடல் எடையை குறைப்பதற்கான காரணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பள்ளிப்பருவத்தில் மிகவும் குண்டாக இருந்ததாகவும், அனைவராலும் கேளி செய்யப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன் பதிவிட்டிருப்பது என்னவென்றால் ‘நான் சிறுவயதில் மிகவும் குண்டாக இருந்தேன், பள்ளிப் பருவத்தில் நான் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு, ‘குண்டாக மற்றும் மைதா உருண்டை போல உருண்டையாகத் தெரிகிற பெண்ணாகவும்’அடையாளம் காணப்பட்டேன்.

எப்போதும் என்னை கேலி செய்வார்கள், என்னைப் பார்த்து சிரிப்பார்கள்.அது என்னை எப்போதும் எரிச்சலூட்டியது, ஏனென்றால் நான் அப்படி அடையாளம் காணப்பட விரும்பவில்லை. அப்போது நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன் .நான் அதற்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. நான் எப்பொழுதும் சிரித்துவிட்டு சென்றுவிடுவேன்.

நான் குண்டான பெண் என்று அடையாள படுத்துவதை விரும்பவில்லை.இனி இப்படி இருக்க போவதில்லை என்னிடம் நானே சொல்லி கொண்டேன். அப்போது தான் என் உடற்பயிற்சி பயணம் தொடங்கியது. நான் 16 வயதில் இருந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். நான் ஒவ்வொரு கேலியையும் ஆக்கபூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொண்டேன் மற்றும் அன்றிலிருந்து மிகவும் கடினமாக உழைத்தேன்.

ஒல்லியாவதற்காக அனைத்துவிதமான முட்டாள்தனமான டயட் முறைகளையும் ஃபாலோ செய்தேன். ஒரு கட்டத்தில் நானே அதிரிச்சியாகும் வகையில் ஒல்லியானேன். பின்புதான் நான் உணர்ந்தேன்.நான் மற்றவர்களை கவர விரும்பவில்லை, நான் ஒல்லியாக இருக்க விரும்பவில்லை. நான் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க விரும்புகிறேன்.எனவே நான் ஒல்லியாக மாறாமல், ஃபிட்டாக மாறுவதற்காக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

‘என்னை கேலி செய்தவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், அவர்கள் என்னை கீழே இறக்கி, என்னை இப்படி அவமானப்படுத்தாமல் இருந்திருந்தால், ஃபிட்னஸை இவ்வளவு சீரியஸாக எடுத்திருக்க மாட்டேன்.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Fashion trends of Nithya Menen
Fashion trends of Nithya Menen
Fashion trends of Nithya Menen
Rashmi Gautam Recent Photos
Rashmi Gautam Recent Photos
Rashmi Gautam Recent Photos
Divyansha Kaushik At Michael Movie Trailer Launch
Divyansha Kaushik At Michael Movie Trailer Launch
Divyansha Kaushik At Michael Movie Trailer Launch

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!
Fashion trends of Nithya Menen Rashmi Gautam Recent Photos Divyansha Kaushik At Michael Movie Trailer Launch