முகப்புஆன்மீகம்ஐப்பசி மாத ராசி பலன்கள் 2022

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2022

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2022

மேஷம்

கணவன் / மனைவி, பார்ட்னர்கள், சம்மந்தப்பட்ட விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நலம். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நலம்

ரிஷபம்

உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். செரிமானக் கோளாறு, உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

மிதுனம்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை.  பூர்வீக சொத்தில் சிக்கல்கள் ஏதும் இருந்தால், விலகும் காலம் இது. சுப விரயம் ஏற்படும்

கடகம்

வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்க்காத மாற்றங்கள் காணப்படும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும், உறவுகள் கைகூடும். வங்கிக் கடன் எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். பொருளாதார ஏற்றம் உள்ளது. வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்

சிம்மம்

இந்த மாதம் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில்மாற்றம், இட மாற்றம், வேலை மாற்றம், பயணங்கள் என்று ஐப்பசி மாதம் பரபரப்பாக இருப்பீர்கள்

கன்னி

கையில் பணம் புரளும். குடும்பத்தார் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். கடன் பாக்கி வசூலாகும். முதலீடு செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கும். சுப காரியம் நடக்கும், நிம்மதி இருக்கும் மகிழ்ச்சி நிலவும்

துலாம்

உங்கள் குறிக்கோள் நிறைவேறும் மாதம் இது. இந்த மாதம் வெளிநாடு யோகம் அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும், முக்கியத்துவம் அதிகரிக்கும். கடன் தீரும், சிக்கல்களில் இருந்து வெளிவருவீர்கள்

விருச்சிகம்

பணியில் இட மாற்றம் அல்லது வீட்டில் இருந்து விலகி இருக்கும் சூழல் ஏற்படும். சுப விரயங்களும் செலவுகளும் ஏற்படும். யாரையும் நம்பி ரகசியங்களை சொல்ல வேண்டாம்

தனுசு

இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமான காலமாக உள்ளது. வெற்றிகளை வாரிக் குவிப்பீர்கள். பண வரவு, வணிகத்தில் அபரிமிதமான லாபம் என்று பொருளாதார நிலை மேம்படும். . தொட்டதெல்லாம் துலங்கும் காலம்

மகரம்

தொழில், வேலை, புதிய வாய்ப்புகள் என்று வேலை சார்ந்த முன்னேற்றங்கள் ஏற்படும். பொருளாதாரம் மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்

கும்பம்

இது ஏற்றத்தாழ்வு நிறைந்த மாதமாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை இழப்பு அல்லது விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழலாம். குலதெய்வம் மற்றும் முன்னோர் வழிபாடு தடைகளை நீக்கும்

மீனம்

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. உடல் நல பாதிப்பு, தொழிலில் மந்தம், நஷ்டம், என்று இன்னல்கள் அதிகரிக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!