October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

பம்மல் இரட்டை பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜையில் அதிமுக மு.நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் பங்கேற்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அதிமுகவின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வினாயகரை வழிபட்டனர்.

பின்பு கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த வினாயகர் சிலைக்கு தீப ஆராதனை காட்டி வணங்கினர் மேலும் இதில் பம்மல் வடக்கு பகுதி செயலாளரும் தாம்பரம மாமன்ற உறுப்பினருமான ஜெகன்நாதன்,முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பம்மல் தா.முகுந்தன்,துரை தண்டபானி மற்றும் வட்ட செயலாளர்கள் குமரன், சுரேஷ்,அலங்கார் பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏரோளமானோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க