Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கிய அடையார் ஆனந்த பவன் மேலாளர் உட்பட மூவர் கைது

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கிய அடையார் ஆனந்த பவன் மேலாளர் உட்பட மூவர் கைது, சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் அடையார் ஆனந்த பவன் வெளியே சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது, இது குறித்து தகவல் அறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முஸ்தபா என்பவர் செய்தி சேகரிக்க சென்று சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை படம் பிடித்துள்ளார்.

இதனை கண்ட அடையார் ஆனந்த பவன் ஊழியர்கள் சென்று மேலாளர் சஞ்சய் சிங் என்பவரை அழைத்து வந்து நான்கு பேராக சேர்ந்து இங்கு வந்து வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது, என மிரட்டி செய்தியாளரின் செல்போனை பறிக்க முயன்றனர், ஆபாசமாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலாளர் இவனை உள்ளே தூக்குங்கடா அடித்து கொள்ளுவோம் என மிரட்டியுள்ளனர். பயந்து போன செய்தியாளர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்து குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் வந்த போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர், இதனால் சக பத்திகையாளர்கள் ஒன்று கூடி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தியதன் அடிப்படையில் அடையார் ஆனந்த பவன் மேலாளர் சஞ்சய் சிங், மற்றும் ஊழியர்கள் இருவர் என மூவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்

சாலையில் சென்ற கழிவுநீர் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதை, அடையார் ஆனந்த பவன் ஊழியர்கள் தடுக்க காரணம், அவர்கள் உணவகத்தில் சேகரமாகும் கழிவுநீரை தொட்டி கட்டி தேக்கி வைத்து கால்வாயில் விடுவதால், கழிவுநீர் ஜி.எஸ்.டி.சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க