முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மதுரையில் ஒரே நேரத்தில் 200 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற உலக சாதனை சிலம்ப போட்டி நடைபெற்றது.

மதுரையில் ஒரே நேரத்தில் 200 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற உலக சாதனை சிலம்ப போட்டி நடைபெற்றது.

மதுரை மாநகர் கருப்பாயூரணி அருகேயுள்ள அண்ணாமலையார் பள்ளியில் ஒரே நேரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிக்க கூடிய 200மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட ஆஸ்கர் உலக சாதனை புத்தக அமைப்பின் சார்பில் சிலம்பாட்டி போட்டி நடைபெற்றது.

இதில் 1 நெடுங்கம்பு சுற்று வரிசை, 2 சக்கர சுற்று வரிசை, 3 நடுக் கம்பு வரிசை, 4 அலங்காரச் சிலம்பம் வரிசை உள்ளிட்ட சிலம்பாட்டங்களை இடைவெளியின்றி மாணவ மாணவியர் தொடர்ச்சியாக 2மணி நேரம் நிகழ்த்திகாட்டுனர்.

உலக அமைதிக்காகவும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், உடல் நலன் பேணுவதை மையமாக வைத்து நடைபெற்ற இந்த உலக சாதனை முயற்சியில் மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றியபடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து சாதனை நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் மதுரை மாவட்ட சிலம்பாட்ட குழு நிர்வாகிகள் , காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டு போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாரட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

மாணவ மாணவிகளின் மனநிலையை சீர்படுத்த இது போன்ற சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என போட்டி ஒருங்கிணைப்பாளர் குமார் தெரிவித்தார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!