முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானுசாதிக் தலைமை வகித்தார்.ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்லக்குட்டி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்திற்கு குத்தாலம் ஒன்றிய குழுத்தலைவர் மகேந்திரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன்,சுமதி.ஒன்றிய குழு உறுப்பினர் நாகலட்சுமிமுத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன் மற்றும் வீடுகள்(ம)சுகாதாரம் உதவி திட்ட அலுவலர் ராஜசேகர் மற்றும் உதவி பொறியாளர்கள்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணி மேற்பார்வையாளர்கள்.திட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன்,வார்டு உறுப்பினர்கள்‌ என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள்,அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர் இறுதியில் ஊராட்சி செயலர் உத்திராபதி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!